• அம்மா

    அழகு தமிழின் தனித்துவம்...

  • விவேகானந்தர்

    வேகமாக ஓடி என்ன பயன்.

  • 26 விஸ் 247

    247 எழுத்து படிச்ச நமக்கு எவ்வளவு இருக்கும்?

Showing posts with label நவக்கிரக வழிபாடு பாடல்கள். Show all posts
Showing posts with label நவக்கிரக வழிபாடு பாடல்கள். Show all posts

பொது

சூரியன் கோமன் செவ்வாய்
சொற்புதன் வியாழன் வெள்ளி
காரிய சனி இராகு கேது
கடவுளரொன் பானாமத்
தாருயச் சக்கரத்தை
தரித்திரர் பூசித்தாலும்
பாரினிற் புத்திர ருண்டாம்
பாக்கியம் நல்குந்தானே.

கேது பகவான் (கேது)

கேதுத் தேதே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரஷி.

இராகு பகவான் (இராகு)

அரவெனும் ராகு ஜயனே போற்றி
கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
இராகுக் கனியே ரம்மியா போற்றி

சனி பகவான் (சனி)

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தா தா.

சுக்கிர பகவான் (வெள்ளி)

சுக்கிர மூர்த்தி சுகமிக ஈவாய்
வக்கிரகமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.

குரு பகவான் (வியாழன்)

குணமுள்ள வியாழக் குரு பகவானே
மணமுடன் வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பரகுருநேசா
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்

புத பகவான் (புதன்)

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி
பதம் தந்து ஆள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி

அங்காரக பகவான் (செவ்வாய்)

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு

சந்திர பகவான் (திங்கள்)

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் புரிவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்பாய் சதுரா போற்றி

சூரிய பகவான் (ஞாயிறு)

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்