ஓம் ஓங்காரி மகவே போற்றி ஓம்
ஓம் ஆங்காரந் தணிப்பாய் போற்றி ஓம்
ஓம் ஆதிசக்தி அருளே போற்றி ஓம்
ஓம் பராசக்தி பாலகா போற்றி ஓம்
ஓம் பாதமலர் பணிந்தோம் போற்றி ஓம்
ஓம் இச்சாசத்தி ஏந்தலே போற்றி ஓம்
ஓம் கிரியாசக்திக் குமரா போற்றி ஓம்
ஓம் ஞானசக்தி நாயகா போற்றி ஓம்
ஓம் குடிலாசக்திக் கோவே போற்றி ஓம்
ஓம் ஆதாரசக்தி அண்ணலே போற்றி ஓம்
ஓம் சகஸ்ராரசக்தி சாதித்தோய் போற்றி ஓம்
ஓம் கோபாலர் குலவிளக்கே போற்றி ஓம்
ஓம் மீனாம்பிகைத் தவக்கொழுந்தே போற்றி ஓம்
ஓம் காளிதாசன் கண்ட தமையனே போற்றி ஓம்
ஓம் இலக்குமி பெருந்துணையே போற்றி ஓம்
ஓம் வரலக்குமி வணங்குஞ்சோதரா போற்றி ஓம்
ஓம் மாரித்தாய் பெற்ற மகவே போற்றி ஓம்
ஓம் துர்க்கை காவலா போற்றி ஓம்
ஓம் துளசி சேகரா போற்றி ஓம்
ஓம் ஜந்தூராள் அரவணைச்செல்வா போற்றி ஓம்
ஓம் இரேணுகா உரத்தாய் போற்றி ஓம்
ஓம் சக்திமந்திரம் தாங்குவாய் போற்றி ஓம்
ஓம் மூலமந்திர முரசே போற்றி ஓம்
ஓம் தாரகமந்திரத் தனியரசே போற்றி ஓம்
ஓம் கூடுவிட்டுக் கூடுபாய்பவா போற்றி ஓம்
ஓம் சூக்குமவுடற் சுதந்திரா போற்றி ஓம்
ஓம் அமிழ்தக் கரமே போற்றி ஓம்
ஓம் அழகு மொழியே போற்றி ஓம்
ஓம் ஆறாதார அமிழ்தமே போற்றி ஓம்
ஓம் மூலாதார மூர்த்தமே போற்றி ஓம்
ஓம் மூலாதாரம் முகிழ்த்தாய் போற்றி ஓம்
ஓம் சுவாதிட்டானம் தொடர்ந்தாய் போற்றி ஓம்
ஓம் மணிபூரகம் மலர்ந்தாய் போற்றி ஓம்
ஓம் அநாகதம் அடைந்தாய் போற்றி ஓம்
ஓம் விசுத்தி விரித்தாய் போற்றி ஓம்
ஓம் ஆக்ஞை அமர்ந்தாய் போற்றி ஓம்
ஓம் சகஸ்ராரம் சாதித்தாய் போற்றி ஓம்
ஓம் துவாத சாந்தம் தொடர்ந்தாய் போற்றி ஓம்
ஓம் துரியம் கடந்தாய் போற்றி ஓம்
ஓம் துரியாதீதம் நின்றாய் போற்றி ஓம்
ஓம் வெட்டாத சக்கரமே போற்றி ஓம்
ஓம் பேசாத மந்திரமே போற்றி ஓம்
ஓம் எட்டாத புட்பமே போற்றி ஓம்
ஓம் இறையாத தீர்த்தமே போற்றி ஓம்
ஓம் கட்டாத லிங்கமே போற்றி ஓம்
ஓம் கருதாத பூசையே போற்றி ஓம்
ஓம் முட்டாத ஞானமே போற்றி ஓம்
ஓம் முளையாத யோகமே போற்றி ஓம்
ஓம் ஆட்கொண்ட அண்ணலே போற்றி ஓம்
ஓம் அருள் கொண்ட வள்ளலே போற்றி ஓம்
ஓம் பூமிப் பொலிவே போற்றி ஓம்
ஓம் புண்ணியப் பூவே போற்றி ஓம்
ஓம் நாவுக் கரசே போற்றி ஓம்
ஓம் நல்வாக்கு நாயகா போற்றி ஓம்
ஓம் தேவ தூதா போற்றி ஓம்
ஓம் தெளிந்த ஞானியே போற்றி ஓம்
ஓம் ஆதி பாலா போற்றி ஓம்
ஓம் அகப் பொருளே போற்றி ஓம்
ஓம் அகப் பொலிவே போற்றி ஓம்
ஓம் வேத நாயகா போற்றி ஓம்
ஓம் வேத ஞானா போற்றி ஓம்
ஓம் வித்தை கற்றவா போற்றி ஓம்
ஓம் விதியைத் தவிர்ப்வா போற்றி ஓம்
ஓம் மதியைக் கோப்பவா போற்றி ஓம்
ஓம் நிதியை அருள்பவா போற்றி ஓம்
ஓம் நிம்மதி சேர்ப்பவா போற்றி ஓம்
ஓம் அமைதி கொடுப்பவா போற்றி ஓம்
ஓம் ஆன்மிகம் தருபவா போற்றி ஓம்
ஓம் பக்தி மலர்ப்பவா போற்றி ஓம்
ஓம் பாதம் அளிப்பவா போற்றி ஓம்
ஓம் பாலனாய் வாழ்பவா போற்றி ஓம்
ஓம் பரையருள் வாய்த்தவா போற்றி ஓம்
ஓம் பராசக்தி உடலவா போற்றி ஓம்
ஓம் பரப்பிரம்மம் ஆனவா போற்றி ஓம்
ஓம் கால தேவனே போற்றி ஓம்
ஓம் கோல எழிலனே போற்றி ஓம்
ஓம் அருளை அடைந்தவா போற்றி ஓம்
ஓம் பொருளைப் புரிந்தவா போற்றி ஓம்
ஓம் இருளைத் தவிர்த்தவா போற்றி ஓம்
ஓம் ஏக்கம் தணிப்பவா போற்றி ஓம்
ஓம் கருவை அறிந்தவா போற்றி ஓம்
ஓம் குருவாய் வந்தவா போற்றி ஓம்
ஓம் ஞானம் பயின்றவா போற்றி ஓம்
ஓம் யோகம் படைத்தவா போற்றி ஓம்
ஓம் ஆயிரத்தில் ஒன்றானவா போற்றி ஓம்
ஓம் அடக்கத்தில் நின்றானவா போற்றி ஓம்
ஓம் கருவே குருவே போற்றி ஓம்
ஓம் உருவே அறிவே போற்றி ஓம்
ஓம் ஒளியே களியே போற்றி ஓம்
ஓம் அருளே அற்புதமே போற்றி ஓம்
ஓம் அறிவே செறிவே போற்றி ஓம்
ஓம் சத்தே சித்தே போற்றி ஓம்
ஓம் முத்தேமோகனமே போற்றி ஓம்
ஓம் வேலே சூலமே போற்றி ஓம்
ஓம் விரிசடையோன் அருளே போற்றி ஓம்
ஓம் திரிபுரத்தாள் கருவே போற்றி ஓம்
ஓம் சங்கரன் தயையே போற்றி ஓம்
ஓம் சங்கரி துணையே போற்றி ஓம்
ஓம் கண்முன் உயர்ந்தவா போற்றி ஓம்
ஓம் காக்கவே வந்தவா போற்றி ஓம்
ஓம் தனித்த தவமே போற்றி ஓம்
ஓம் பனித்த கண்ணே போற்றி ஓம்
ஓம் இனித்த மனமே போற்றி ஓம்
ஓம் எண்வகைச் சித்தோனே போற்றி ஓம்
ஓம் சித்தர் கணத்தோனே போற்றி ஓம்
ஓம் சக்தி உபாசகா போற்றி ஓம்
ஓம் பங்காரு பாலகா போற்றி ஓம்
ஓம் சக்தியே! பங்காரு அடிகளே ஓம்!
ஓம் சக்தியே! பங்காரு அடிகளே ஓம்!
ஓம் சக்தியே! பங்காரு அடிகளே ஓம்!
ஓம்! ஓம்! ஓம்!
0 comments:
Post a Comment