இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும். 

மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும். எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். 

சர்க்கரை நோய்க்கு ஓர் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது என்பது தெரியுமா? மேலும் அம்மருந்து சர்க்கரை நோயுடன் வேறுபல பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது என்பது தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

வெண்டைக்காயின் சத்துக்கள் 
வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. 

வெண்டைக்காய் தண்ணீர் 
சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். 

சர்க்கரை நோயை விரட்டும்
சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர். 

மருத்துவ ஆய்வு
வெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது. 

வறுத்த வெண்டைக்காய் விதை
துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது. 

கொலஸ்ட்ரால்
உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம். 

நோயெதிர்ப்பு சக்தி
நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும். 

சிறுநீரக நோய்கள்
சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும். 

ஆஸ்துமா
முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்.

0 comments:

Post a Comment