முல்லை - மாறன் வழுதி
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலராஎவ்வ நெஞ்சத்து எ·கு எறிந்தாங்கு
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே
அதனினும் கொடியள் தானே மதனின்
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது
0 comments:
Post a Comment