கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு நின் குறை முடித்த பின்றை என் குறை செய்தல்வேண்டுமால் கை தொழுது இரப்பல் பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு நின் கிளை மருங்கின் சேறிஆயின் அம் மலை கிழவோற்கு உரைமதி இம் மலைக் கானக் குறவர் மட மகள் ஏனல் காவல் ஆயினள் எனவே காமம் மிக்க கழிபடர்கிளவி
0 comments:
Post a Comment