பாலை - முடத்திருமாறன்


 

முளி கொடி வலந்த முள் அரை இலவத்துஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே
இடைச் சுரத்து மீளலுற்ற
நெஞ்சினைத் தலைமகன் கழறியது

0 comments:

Post a Comment