குறிஞ்சி - தொல்கபிலர்



வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே
அளிதோ தானே தோழி அல்கல்
வந்தோன்மன்ற குன்ற நாடன்
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி
மையல் மடப் பிடி இனைய
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு
உரைப்பாளாய் சிறைப்புறமாகச் சொல்லியது

0 comments:

Post a Comment