சனிக்கிழமை

திருச்சிற்றம்பலம்
தேவாரம்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

திருவாசகம்

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேன் உடைய
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த ஆய
தேனினைச் சொரிந்த புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே

திருவிசைப்பா

கடியார் கணம் புல்லர் கண்ணப்பர் என்றும்
அடியார் அமர்உலகம் ஆள நீஆளாதே
முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டு நீ குலாவிக் கூத்தாடினையே

திருப்பல்லாண்டு

சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர் சிறு நெறி சேராமே
வில்லாண்ட கனகத் திரண் மேருவிடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

திருப்புராணம்

என்றும் இன்பம் பெருகும் இயல்பினோடு
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்றுராடியாரவர் வான் புகழ்
நின்ற தெங்கு நிலவி உலகெலாம்.

திருப்புகழ்

கருப்பத்தூறிப் பிறவாதே
கனக்கப்பாடுற் றுழலாதே
திருப்பொற் பாதத் தனுபூதி
சிறக்கப் பாலித் தருள்வாயே
பரப்பற்றாருக் குரியோனே
பரத்தப் பாலுக் கணுயோனே
திருக்கைச் சேவற் கொடியோனே
செகத்திற்சோதிப் பெருமாளே

திருச்சிற்றம்பலம்

0 comments:

Post a Comment