திருச்சிற்றம்பலம்
தேவாரம்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றையணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னை உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
திருவாசகம்
முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல் வேனைப்
பத்தி நெறியறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்த மலம் அறிவித்துச் சிவமாக்கியெனை ஆண்ட
அத்தனெனக் கருளியவாறார் பெறுவார் அச்சோவே
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே
ஜயா நீ உலாப் போந்த அன்று முதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரரே.
குழலொலி யாழொலி கூத்தொலி யேத்தொலி
யெங்குங் குழாம் பெருகி
விழாவொலி விண்ணளவுஞ் சென்ற விம்பி
மிகு திருவாரூரின்
மழவிடையார்க்கு வழிவழி யாளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடியெம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
ஜந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப் பெருங் கரணங்கள் நான்குஞ்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந்
திருந்து சாத்துவிகமே யாக
இந்து வாழ் சடையானாடு மானந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
இறவாமற் பிறவாமற் எனையாள் சற் குருவாகி
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனே சற்குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே
பத்தி நெறியறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்த மலம் அறிவித்துச் சிவமாக்கியெனை ஆண்ட
அத்தனெனக் கருளியவாறார் பெறுவார் அச்சோவே
திருவிசைப்பா
ஜயா நீ உலாப் போந்த அன்று முதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரரே.
திருப்பல்லாண்டு
யெங்குங் குழாம் பெருகி
விழாவொலி விண்ணளவுஞ் சென்ற விம்பி
மிகு திருவாரூரின்
மழவிடையார்க்கு வழிவழி யாளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடியெம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
அளப் பெருங் கரணங்கள் நான்குஞ்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந்
திருந்து சாத்துவிகமே யாக
இந்து வாழ் சடையானாடு மானந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
திருப்புகழ்
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனே சற்குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே
திருச்சிற்றம்பலம்
0 comments:
Post a Comment