இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எப்போது பாதை பிறக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்க இன்னொரு புறம் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இராமர் பாலம் தொடர்பான மர்மங்களும் நீடித்துக்கொண்டே செல்கின்றன.
காலம் காலமாக மரபு வழியில் இப்பாலம் தொடர்பாக ஒவ்வொரு கதைகள் சொல்லப்பட்டாலும், இராமாயணம் எப்போது நிகழ்ந்தது, இராமர் பாலம் கட்டப்பட்டு இன்றோடு எத்தனை வருடங்கள் என்பதும் புதிராகவே காணப்படுகின்றது.
இராமாயணத்தோடு தொடர்புபடுத்தி பார்த்தால் இராமர் பாலம் உருவாக்கப்பட்டு 400இலட்சம் வருடங்கள் நிறைவடைகின்றன, ஆனால் ஆய்வாளர்களின் கணிப்பின்படி இப்பாலம் 17 இலட்சம் வருடங்கள் பழமையானது என கூறப்படுகின்றது.
இப்பாலம் கோரல் ரீப் என்ற பவளப்பாறைகளால் உருவாக்கப்பட்டதாகும். தற்போது மணலாலும் கடல்வாழ் உயிரிகளின் வாழிடமாகவும் திகழும் இப்பாலத்தின் ஊடாக கடலின் ஊடே 5 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து செல்ல முடியும்.
அதன் பின்னரான கடல்வழிப்பாதை முழுவதுமாக கடலுள் மூழ்கி காணப்படுவதாக ஆய்வாளர்கள் சான்று பகிர்கின்றனர்.
இவ்வாறான பாலம் கி.மு 1450 ஆம் ஆண்டளவில் மக்களின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இக்காலப்பகுதியில் இலங்கையை ஆண்ட மன்னன் இராமநாத சுவாமிக்கு பால் கொடுத்து அனுப்பியதாகவும், இந்தியாவிலிருந்து குதிரைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
இவற்றையெல்லாம் விட நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியது பாலம் கட்டப்பட்ட கற்கள் தொடர்பாகவும், பாலம் உண்மையில் எப்போது கட்டப்பட்டது என்பது தொடர்பாகவே ஆகும்.
குறித்த “கோரல் ரீப்” கற்கள் நிலன் மற்றும் நலன் என்பவர்கள் வேலைப்பாட்டால்தான் மிதக்கின்றன என புராணங்கள் கூறுகின்றன.
இருப்பினும் சுனாமியின் தாக்கம் இலங்கை இந்தியாவை பெருமளவில் தாக்கிய போதும் கூட இக்கற்கள் இடம்மாறாமல் தனித்து நின்றமைதான் வியப்புக்குரியது.
காரணம் கடலலையால் பாரியளவான கோட்டைகளேயே தகர்க்க முடியும்,ஆனால் மிதக்கும் கற்கள் தடம் மாறாமல் நிலைத்த ஒரே இடத்தில் நிற்பதுதான் வரலாற்றாய்வாளர்களையும் சற்றே குழப்பத்திற்குள்ளாக்கியது.
இப்பாலமானது தற்போதைய பாலங்களை போல அல்லாது 30 கி.மீ நீளமும் 3 கிலோமீற்றர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதில் ஒரு கோடி வானரங்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.
இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் மன்னார் தீவு வரையிலும் நீண்டு காணப்படும் இப்பாலம் இராம நாமம் பொறிக்கப்பட்ட கற்களை கொண்டு உருவாக்கப்பட்டதாவும் சிலர் கூறுவர்.
மேலும் இப்பாலத்தினை ஆதாமின் பாலம் எனவும் சிலர் கூறுவர். உலகின் முதல் மனிதர்கள் என அடையாளப்படுத்தப்படும் ஆதாம் ஏவாள் இலங்கை வருவதற்காக இந்தப்பாலத்தினை உருவாக்கியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன.
அவர்களின் புதல்வர்கள் ஹாபில், ஆபில் ஆகியோர் குறித்த பாலத்தை பராமரித்ததாகவும் இவர்களில் ஒருவரின் கல்லறை இராமேஸ்வரத்தில் காணப்படுகின்றதாவும் கூறப்படுகின்றது.
மொத்தத்தில் பலவிதமான மர்மங்களை தன்னகத்தே கொண்ட வரலாற்று பாலம்தான் இராமர் பாலம்.
ஆராய்ச்சியாளர்கள் விடைதேட முயற்சித்தால் பின்வரும் விடயங்களுக்கும் விடைதேட வேண்டும்.
- இராமர் பாலம் இராம படைகளால் உருவாக்கப்பட்டதா? அல்லது ஆதாமால் உருவாக்கப்பட்டதா?
- இப்பாலம் தோன்றி 400 இலட்சம் வருடங்களா? அல்லது 17 இலட்சம் வருடங்களா?
- சுனாமி தாக்கத்தாலும் நகராத மிதக்கும் கற்கள், போன்ற விடயங்களுக்கெல்லாம் விடை கிடைக்க வேண்டும்.
இப்போதில்லாவிட்டாலும் உலகின் கடைசி மனிதன் உயிர்விடும் முன்னமாவது இதற்கான காரணங்கள் வெளிச்சம் பெறுமா என்பதே காலத்தின் கேள்வியாகவும் அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment