திருச்சிற்றம்பலம்
தேவாரம்
மாதர்ப்பிறைக் கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு
நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஜயாறடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.
திருவாசகம்
நானேயோ தவஞ் செய்தேன் சிவாய நம எனப்பெற்றேன்
தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்தென துள்ளம் புகுந்தடியேற்கருள் செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.
திருவிசைப்பா
தத்தையங் கனையார் தங்கள் மேல் வைத்த
தாயவை நூறாயிரம் கூறிட்டு
அத்தில் அங்கு ஒரு கூறு உன் கண் வைத்தவருக்கு
அமர் உலகு அளிக்கு நின் பெருமை
பித்தனென் றொருகால் பேசுவரேனும்
பிழைத்தவை பொறுத்து அருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த
கங்கை கொண்ட சோளேச் சரத்தானே.
திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள்
வஞ்சகர் போயகல
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமைகோன்
அடியோமுக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம்
மண்ணுலகத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
திருப்புகழ் படிக்குமவர் சிந்தை வலுவாலே
ஒருத்தரை மதிப்பதில்லை உன்தன் அருளோலே
பொருப்பரை மிகப் பொருது வென்று மயில் மீதே
தரித்தொரு திருத்தணியில் நின்ற பெருமாளே.
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
திருப்புகழ்
திருப்புகழ் படிக்குமவர் சிந்தை வலுவாலே
ஒருத்தரை மதிப்பதில்லை உன்தன் அருளோலே
பொருப்பரை மிகப் பொருது வென்று மயில் மீதே
தரித்தொரு திருத்தணியில் நின்ற பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
0 comments:
Post a Comment