திருச்சிற்றம்பலம்
தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவென் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட் பணிந் தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே
திருவாசகம்
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே
பற்று நான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன்
ஆண்ட நீ அருளிலை யானால்
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே.
திருவிசைப்பா
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம்
குளிர என் கண் குளிர்நதனவே.
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர்பெறுவார் உலகில்
ஊரும் உலகும் கழற உழறி உமை மனவாளனுக்கு ஆட் பாரும்
விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி
அற்புதக் கோலநீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
திருப்புகழ்
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனெ் றென்றுற் றுனை நாளும்
கண்டு கொண்டன் புற்றிடுவோனே
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவை பாலா
செந்திலங் கண்டிக்கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே
திருச்சிற்றம்பலம்
0 comments:
Post a Comment